Home / இன்றைய செய்திகள் / தூக்கு தண்டனையில் இருந்து தப்பிய சூடான் பெண் போப்புடன் சந்திப்பு!!

தூக்கு தண்டனையில் இருந்து தப்பிய சூடான் பெண் போப்புடன் சந்திப்பு!!

2e507695-b9ad-47e2-b308-c902fc73156f_S_secvpfஆப்பிரிக்க நாடான சூடானை சேர்ந்தவர் மெரியம் அட்ராப் அல் ஹாடி முகமது அப்துல்லா. இவரது தாய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தந்தை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் சிறு வயதில் இருந்தே இவர் தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்தார். எனவே கிறிஸ்தவராக வளர்ந்த இவர் தனது பெயரை மெரியம் யெக்யா இப்ராகிம் இசாக் என மாற்றிக் கொண்டார்.

இந்த நிலையில் அவர் கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கு தாயாகியும் விட்டார். இதற்கிடையே, மதம் மாறி திருமணம் செய்ததாக கூறி அவர் மீது கார்டோம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சூடான் ஒரு முஸ்லிம் நாடு. இங்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேறு மதத்தினரை திருமணம் செய்ய அனுமதி இல்லை. இதற்கிடையே இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மதம் மாறி திருமணம் செய்த மரியத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், சிறை ஆஸ்பத்திரியில் மெரியம்முக்கு இரண்டாவதாக அழகான பெண் குழந்தை பிறந்தது. மதரீதியான தண்டனை என்ற வாதத்தை கைவிட்டு, மனிதநேய அடிப்படையில் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும், மனித உரிமை ஆர்வலர்களும் சூடான் அரசை வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் மெரியம் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது மெரியத்துக்கு மரண தண்டனை விதித்து வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்பை ரத்து செய்த நீதிபதி, அவரை உடனடியாக விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் சிறையில் இருந்து விடுதலையாகி விட்டதாகவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பான ஒரு ரகசிய இடத்தில் அவரை தங்க வைத்துள்ளதாகவும் அவரது வக்கீல் மொஹனெட் முஸ்தபா தெரிவித்திருந்தார்.

ஆனால், அதற்கு மறுநாளே அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க இத்தாலி அரசு முயற்சி எடுத்து வந்தது. இந்நிலையில், நேற்று தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் மெரியம் இத்தாலிய அரசு விமானம் மூலம் ரோம் நகரத்துக்கு சென்றார்.

இத்தாலியின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் லபோ பிஸ்டெல்லி அவருடன் விமானத்தில் உடன் சென்றார். ரோமில் உள்ள சியாம்பினோ விமான நிலையத்தில் மெரியம் குடும்பத்தினர் இறங்கியபோது அந்நாட்டுப் பிரதமர் மட்டெயோ ரென்சி அவர்களை வரவேற்றார்.

பின்னர், வாடிகன் அரண்மனையில் கத்தோலிக்க மதகுரு போப் பிரான்ஸை மரியம் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது மெரியத்தின் பக்தியையும், மத நம்பிக்கையும் வெகுவாக பாராட்டிய போப், மெரியத்தையும் அவரது கணவன் மற்றும் பிள்ளைகளையும் ஆசீர்வதித்தார்.

இன்னும் சில நாட்களுக்கு இத்தாலியில் தங்கியிருக்கும் மெரியம், பின்னர் அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: