Home / இன்றைய செய்திகள் / துருக்கியில் கிரிமினல் குற்றச்சாட்டுகளில் 50 போலீஸ் அதிகாரிகள் கைது!!

துருக்கியில் கிரிமினல் குற்றச்சாட்டுகளில் 50 போலீஸ் அதிகாரிகள் கைது!!

c55690d2-7297-434b-be1e-5eb362ce9076_S_secvpfதுருக்கியில் இன்று ஊழல் மற்றும் பதவி துஷ்பிரயோகம் போன்ற கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் 50க்கும் மேற்பட்ட மூத்த காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிபர் தேர்தலை நாடு எதிர்கொள்ளவிருக்கும் நேரத்தில் பிரதமர் ரெசெப் தையிப் எர்டோகன் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை எதிரிகள் மீதான நேரடிப் பாய்ச்சல் என்று பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகள் உட்பட முன்னாள் அதிகாரிகளும் சேர்த்து 40 பேர் இஸ்தான்புல்லில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் ஓமர் கோசும் அடங்குவார் என்று தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன.

இன்னும் 15 பேர் நாட்டின் பிற பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். எர்டோகனின் முன்னாள் கூட்டாளியான பெதுல்லா குலன் பிரதமரையும் அவரது உள்வட்ட சகாக்களையும் இணைக்கும் ஒரு பரந்த ஊழல் குற்றச்சாட்டு இயக்கத்தினை நடத்துவதைத் தடுக்கும்பொருட்டு இந்த கைது நடவடிக்கை நடத்தப்பட்டதாகப் பத்திரிகை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இன்று அதிகாலை நடைபெற்ற பெரிய தேடுதல் நடவடிக்கையில் இஸ்தான்புல்லில் மட்டும் 200 முகவரிகளை காவல்துறை சோதனையிட்டதாகத் தெரிய வந்துள்ளது. இதேபோல் மேலும் 22 நகரங்களில் சோதனை நடந்துள்ளதாக தினப் பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது. இவர்கள் மீது உளவு, சட்ட விரோத ஒட்டுக்கேட்பு, தனியுரிமை மீறல், புனையப்பட்ட ஆதாரங்கள், ரகசிய விசாரணையை மீறிய குற்றங்கள் போன்றவை சுமத்தப்பட்டுள்ளன.

ஒட்டுக்கேட்பு விவகாரங்களில் துருக்கியின் தேசிய புலனாய்வுத்துறை அமைப்பின் தலைவர் ஹக்கின் பிடனின் தொலைபேசித் தகவல்கள் இடம் பெற்றதாக இஸ்தான்புல்லின் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: