Home / இன்றைய செய்திகள் / திருமலையில் குளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் பலி!!

திருமலையில் குளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் பலி!!

1431572497help-meதிருகோணமலை, பள்ளிக்குடியிருப்பு – தங்கபுரத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று (27) கைமுந்தான் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது நீரினுள் முழ்கி மரணமடைந்துள்ளனர்.

பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக் கல்லுாரியில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் டேவிட் ஜெயசீலன் மற்றும் தங்கபுரம் ஸ்ரீகணேச வித்தியலாயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி பயிலும் இலட்சுமணன் யசுர்சனன் ஆகியவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

இம் மாணவர்கள் இருவரும் விடுமுறையை சந்தோசமாக கழிப்பதற்கு நீராடுவதற்காக குளத்திற்கு சென்றிருந்தார்கள் என இறந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: