Home / இன்றைய செய்திகள் / திரிஷ்யம் ரீமேக்கில் ஸ்ரீதேவி நடிக்கவில்லை?

திரிஷ்யம் ரீமேக்கில் ஸ்ரீதேவி நடிக்கவில்லை?

fe44f6c8-8144-4189-bc06-b6aa892e8bac_S_secvpfகமல் ஹாசன் தற்போது ‘விஸ்வரூபம் 2’, உத்தமவில்லன்’ படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு மலையாளப்படமான ‘திரிஷ்யம்’ ரீமேக்கில் நடிக்கவுள்ளார். ‘திரிஷ்யம்’ படம் மலையாளத்தில் மோகன்லால்-மீனா ஜோடியாக நடித்து வெற்றிகரமாக ஓடிய படம். 100 நாட்கள் தாண்டி ஓடி ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.

இப்படம் தெலுங்கில் வெங்கடேஷ், மீனா ஜோடியாக நடிக்க ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் ரிலீசானது. அங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

தமிழிலும் கமல், கவுதமி ஜோடியாக நடிக்க திரிஷ்யம் ரீமேக் ஆகிறது. இதற்கான படபூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கமல் கலந்து கொண்டார். இதில் பெண் போலீஸ் அதிகாரி வேடத்தில் ஸ்ரீதேவி நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அந்த பெண் போலீஸ் வேடத்திற்கு மலையாளத்தில் ‘திரிஷ்யம்’ படத்தில் நடித்த ஆஷா சரத் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: