Home / இன்றைய செய்திகள் / திபெத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்த சீனா திட்டம்!!

திபெத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்த சீனா திட்டம்!!

1917b47a-684c-4d5a-8a5d-ee713e5ce5e2_S_secvpfசுயாட்சி பிராந்தியமாக திபெத் அறிவிக்கப்பட்டபோதிலும் அந்நாடு இன்னமும் சீன அரசின் மறைமுகக் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றது. இங்குள்ள விமான நிறுவனங்கள், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகள் திபெத்தின் போக்குவரத்தை எளிதாக்கியுள்ளபோதிலும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் நவீனப்படுத்தப்படாமல்தான் இருக்கின்றன. இதனால் வரும் 2020ஆம் ஆண்டிற்குள் திபெத்தில் அதிக அளவிலான சாலைகள் மற்றும் விமான நிலையங்களை அமைத்து அந்நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பினை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக சீன அரசு நேற்று அறிவித்துள்ளது.

வரும் 2020ஆம் ஆண்டிற்குள் இந்த தன்னாட்சி பிராந்தியத்தில் 1,10,000 கி.மீ தூரத்திற்கு சாலைகள் விஸ்தரிக்கப்படும். கிராமப்புறப் பகுதிகளில் கவனம் செலுத்தும்விதமாக அங்குள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும் நகரத்திற்கான ஒரு சாலை இணைப்பு நிறைவேற்றப்படும். அதுபோல் ரயில்வேத்துறையிலும் 1300 கி.மீ வரையிலான தூரம் ஆரம்பகட்ட திட்டங்களில் ஒருங்கிணைக்கப்படும். மேலும் பல புதிய விமான நிலையங்களும் அந்நாட்டில் அமைக்கப்படும். திபெத்தின் போக்குவரத்து வளர்ச்சி அந்நாட்டின் நீடித்த செழிப்புக்கு மட்டுமின்றி சீனாவின் தேசிய பாதுகாப்பிற்கும் இன்றியமையாதது என்று சீன அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த மேம்பாட்டு முயற்சிகளில் திபெத் அமைச்சகமும் தனது ஆதரவை அளிப்பதுடன் இந்தத் திட்டங்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முழுமையாக நிறைவடைவதற்காகன சிறப்பு முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று திபெத் அரசின் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகின்றது.

கடந்த 20 வருடங்களில் திபெத்தின் போக்குவரத்து வளர்ச்சிக்கான முதலீடாக சீனா 83 பில்லியன் யுவானை அளித்துள்ளதாகவும் இந்த செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: