Home / இன்றைய செய்திகள் / தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் வெளிநாடு செல்ல ராணுவ அரசு அனுமதி!!

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் வெளிநாடு செல்ல ராணுவ அரசு அனுமதி!!

unnamedதாய்லாந்தின் பிரதமராகச் செயல்பட்டு வந்த இன்ங்லக் ஷினவத்ரா கடந்த 2006-ம் ஆண்டில் பதவி விலக்கப்பட்ட அவரது சகோதரர் தக்ஷின் ஷினவத்ராவின் கைப்பாவையாகச் செயல்படுவதாகக் கூறி அவரையும் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சியினர் கடந்த ஆண்டு இறுதியில் போராட்டத்தைத் துவக்கினர்.

ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த இந்தப் போராட்டத்தினால் கடந்த மே மாதம் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக தெரிவித்த நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று அவரை பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேற்றியது. தொடர்ந்து அதே மாதம் 22-ம் தேதி இன்ங்லக்கைப் பதவியிலிருந்து இறக்கிய ராணுவம் ஆட்சியைத் தன கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.

அந்த சமயத்தில் இன்ங்லக் உட்பட நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் காவலில் வைத்த ராணுவம் அமைதியை நிலைநாட்டவே இந்த செயலை மேற்கொண்டதாகவும் கூறியது.

இவர்களில் சிலர் இன்னும் காவலில் இருக்க பலர் மீது அரசியல், பயணம் போன்ற பல விஷயங்களில் தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆனால் முன்னாள் பிரதமர் இன்ங்லக் ஷினவத்ரா மேற்கொள்ளவிருக்கும் ஐரோப்பியப் பயணத்திற்கு தாய்லாந்தின் ராணுவ அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

அரசியல் செயல்பாடுகள் எதிலும் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடுடன் அவரது தனிப்பட்ட பயணத்திற்கு அரசு உத்தரவு அளித்துள்ளது. இன்ங்லக் தனிப்பட்டமுறையில் எங்களின் கட்டளைகள் எதையும் மீறவில்லை. அதனால் அவருக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது என்று ராணுவ செய்தித் தொடர்பாளரான கர்னல் விந்தை சுவரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியிலிருந்து இறக்கப்பட்டபின் இன்ங்லக் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: