Home / இன்றைய செய்திகள் / தலைமன்னாரில் கடற் பறவைகளின் முட்டைகளுடன் நால்வர் கைது!!

தலைமன்னாரில் கடற் பறவைகளின் முட்டைகளுடன் நால்வர் கைது!!

119668668033சுற்றுலா கடற் பறவைகளின் முட்டைகளுடன் சந்தேகநபர்கள் நால்வர், தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊருமலை கடற்பரப்பில் வைத்து இவர்கள் நால்வரும் நேற்று (26) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை இவர்களது படகிலிருந்து பறவைகளின் முட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது பறவைகளது 452 முட்டைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மற்றும் இந்தியாவின், ராமேஸ்வரம் பகுதியிலிருந்து இம் முட்டைகள் எடுத்துவரப்பட்டுள்ளன.

திருகோணமலை, குச்சவெளி மற்றும் தலைமன்னார் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (27) மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: