Home / இன்றைய செய்திகள் / தமிழக மீனவர்கள் 38 பேர் கைது!!

தமிழக மீனவர்கள் 38 பேர் கைது!!

142910817fisherman3தமிழகம் – புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 38 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, 6 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்தனர்.

மேலும், அவர்களின் 4 விசைப்படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், நெடுந்தீவு அருகே புதுக்கோட்டை மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

அவர்களது 5 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் புதுக்கோட்டை மீனவர்கள் யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: