Home / இன்றைய செய்திகள் / சீனா: விதிமுறை மீறி கட்டியதாக தேவாலயத்தின் சிலுவையை அகற்றிய காவல்துறையினர்!!

சீனா: விதிமுறை மீறி கட்டியதாக தேவாலயத்தின் சிலுவையை அகற்றிய காவல்துறையினர்!!

8e483577-6991-4c21-8ff1-5a2e802c9706_S_secvpfகம்யூனிசத்தின் கோட்டையாகக் கருதப்படும் சீனாவில் சமீபகாலத்தில் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

சீனாவின் ஜெருசலேம் என்று அழைக்கப்படும் தெற்கு ஷாங்காய் பகுதியில் கிறிஸ்துவ மதத்தின் வளர்ச்சியத் தடுக்கும் மறைமுகக் செயல்களில் அரசு ஈடுபட்டுவருகின்றது. கட்டிடங்களுக்காக குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுவதாகக் கூறும் அதிகாரிகள் பல இடங்களில் தேவாலயங்களை அழித்து வருகின்றனர். ஆனால் அத்துடன் இத்தகைய விதிமுறைகளை மீறிய வேறு பல கட்டிடங்களும் இடிக்கப்பட்டு வருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் சீஜியாங் மாகாணத்தில் தெற்கு ஷாங்காயின் கடற்கரைப் பகுதியான வென்ஷூ நகரப் பகுதியில் உள்ள 130 தேவாலயங்களில் இருக்கும் சிலுவைகளில் பலவற்றை அகற்றியும், இன்னும் சில இடங்களில் அவற்றை அகற்றிவிடுவதாகவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இன்று காலை கூட இங்கிருக்கும் லாங்கேங் ஹவாய் என் தேவாலயத்தின் மேல் அமைக்கப்பட்டிருந்த சிலுவையை அவர்கள் அகற்றினர். செய்தி அறிந்து 200-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியபோதும் அவர்கள் பிரச்சினை எதுவும் செய்யாமல் காவல்துறையினருக்கு வழி விட்டனர்.

3 மீ உயரம் இருந்த அந்த சிலுவையை கிரேனின் உதவி கொண்டு அகற்றிய காவல்துறையினர் கட்டிடத்தின் உயரம் விதிமுறைகளை மீறியிருந்தது என்று கூறி அகற்றிய சிலுவையை அந்த பாதிரியார்களிடமே கொடுத்தனர். அழுத வண்ணம் சிலுவையை சுற்றி நின்று அவர்கள் பிரார்த்தனை செய்ததாக கூடியிருந்த உறுப்பினர்களில் ஒருவரான கியூ லினியோ தெரிவித்தார்.

இதற்கான விளக்கத்தை அளிக்க காவல்துறையினர் முன்வரவில்லை. இருப்பினும், வேகமான வளர்ச்சியைப் பெற்றுவரும் கிறிஸ்துவ மதத்தினை தடை செய்யும் நோக்கத்துடனே அரசு இத்தகைய தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக அரசியல் ஆய்வாளர்களும், கிறிஸ்துவ மதத் தலைவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: