Home / இன்றைய செய்திகள் / சிறுவனைக் கடத்தியது யார்? பொலிஸார் விசாரணை!!

சிறுவனைக் கடத்தியது யார்? பொலிஸார் விசாரணை!!

31மீகலெவ – குணுபொலகம பிரதேசத்தில் வியாபாரி ஒருவரின் நான்கு வயது மகனை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் குறித்த வியாபாரியின் வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத நால்வர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் இதன்போது சந்தேகநபர்களால் வியாபாரி மற்றும் அவரது ஆறு வயது மகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் கடத்தலுக்கு காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இதேவேளை, குறித்த சிறுவன் தொடர்பில் தகவலறிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: