Home / இன்றைய செய்திகள் / சித்தார்த்துக்கு குட்டு!!

சித்தார்த்துக்கு குட்டு!!

Untitled-1112சித்தார்த்-லட்சுமிமேனன் நடித்துள்ள படம், ஜிகிர்தண்டா. பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படம், கடந்த வாரம் வௌியாக இருந்தது.

ஆனால் வௌியீட்டுத் திகதியை கதிரேசன் தள்ளி வைத்தார். இதுபற்றி சித்தார்த் டிவிட்டரில், எங்களை கேட்காமல், தயாரிப்பாளர் அவராகவே வௌியீட்டைத் தள்ளி வைத்திருக்கிறார் என்று கூறியிருந்தார்.

இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சினிமா வியாபார பிரச்சினைகள் நடிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

ஒரு படம் வெளியாகும்போது தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்களின் கருத்தை தெரிந்துதான் வௌியீட்டுத் திகதியை அறிவிக்க முடியும். இது தெரியாமல், படம் தள்ளிப்போனதற்கு தயாரிப்பாளரை சித்தார்த் குற்றம்சாட்டியிருப்பது கண்டனத்துக்குரியது.

படத்தில் நடித்தற்குரிய சம்பளத்தை வாங்கிய சித்தார்த், பட வெளியீட்டு திகதியில் தலையிட எந்தவித உரிமையும் இல்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: