Home / இன்றைய செய்திகள் / சிங்கள மக்களை எதிர்க்க வேண்டிய அவசியம் எமக்கில்லை – சம்பந்தன்!!

சிங்கள மக்களை எதிர்க்க வேண்டிய அவசியம் எமக்கில்லை – சம்பந்தன்!!

192320918733பெரும்பான்மை சிங்கள மக்களை எதிர்க்க வேண்டிய அவசியம் எமக்கில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34 ஆவது சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிங்கள பெரும்பான்மை மக்களை நாங்கள் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை சிங்கள மக்களுடன் சேர்ந்தே தமிழ் மக்கள் தமது பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.

விட்டுக்கொடுத்து போக வேண்டியதற்கு விட்டுக்கொடுத்தும் விட்டுக்கொடுக்க முடியாததற்கு விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் நாம் எமது தீர்வை பெற வேண்டும்.

தமிழர்கள் இந்த மண்ணிலே சரித்திர ரீதியாக வாழ்ந்தவர்கள் அவர்களும் இந்த நாட்டின் இறைமை இருக்கின்றது எனவே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் தமது ஜனநாயக தீர்ப்பை நமக்கு விரும்பி அளித்துள்ளனர் எனவே தமிழ் மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையை வீணாக்க மாட்டோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை நாம் இன்னமும் வலுப்படுத்த வேண்டியவர்களாக உள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்தே இந்த பாதையினை வென்றேடுகக் வேண்டும்.

நாட்டினை பிரிக்க தேவையில்லை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கபப்ட வேண்டும் அதற்காக எமது உரிமைகளையும் நாம் விட்டுக்கொடுக்க போவதில்லை

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை ஏற்படுத்தவும் ஏற்படுத்திய திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் நாம் தயாராக வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: