Home / இன்றைய செய்திகள் / சர்வதேசத்துக்கு எதிராக கியூப புரட்சியை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்!!

சர்வதேசத்துக்கு எதிராக கியூப புரட்சியை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்!!

Dinesh-Gunawardena_6இலங்­கைக்கு எதி­ராக சர்­வ­தேச அழுத்­தங்­களும் அச்­சு­றுத்­தல்­களும் எழும் போது மக்கள் கியூப புரட்­சியை முன்­மா­தி­ரி­யாக கொண்டு சர்­வ­தேச நாடு­களின் அழுத்­தங்­களில் இருந்து மீள் எழுச்சி பெற அணி­தி­ரள வேண்டும் என நீர் வழங்கல் மற்றும் வடிக்­கா­ல­மைப்பு அமைச்­சரும் இலங்கை, கியூப நட்புறவு சங்க தலை­வ­ரு­மான தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார்.

கியூபா நாட்டில் 1953 ஆம் ஆண்டு அமெ­ரிக்கபேரின வாதி­க­ளினால் கட்­ட­வீழ்த்­து­வி­டப்பட்ட மொங்­காட தாக்­கு­தலின் 61 ஆவது ஆண்டினை நினைவுக் கூரும் நிகழ்வு நேற்று திங்­கட்­கி­ழமை கைத்­தொழில் தொழில் நுட்ப பயிற்சி நிலை­யத்தின் நடை­பெற்ற போதே தினேஸ் குண­வர்­தன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இந்­நி­கழ்வில் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதா­ரண, அமைச்சர் சுசில் பிர­ம­ ஜெ­யந்த மற்றும் கியூபா நாட்டு தூது­வர்கள், ஸ்ரீலங்கா மக்கள் கட்சி உறுப்­பி­னகள், மக்கள் விடு­தலை முன்­னணி உறுப்­பி­னர்கள் உள்­ளிட்டோர் கலந்து கொண்­டனர்.

இங்கு தினேஸ் குண­வர்­தன மேலும் தெரிவிக்கையில்,

அமெ­ரிக்க படை­களின் தாக்­கு­த­லினால் பிஞ்­சுக்­கு­ழந்­தை­களும் மக்­களும் கொத்து கொத்­தாக கொல்­லப்­பட்­டனர்.இவ்­வா­றான தாக்­கு­தலின் உச்­சக்­கட்­டமே மொங்­காட தாக்­குதல் என அழைக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான பேரி­ன­வா­தி­களின் வன்மு­றை­க­ளுக்கும், சர்­வ­தேச அழுத்தங்­க­ளுக்கும் பொரு­ளாதார தடை­க­ளுக்கும் முகம் கொடுத்த கியூபா நாட்டுமக்கள் தமது தன்­னம்­பிக்­கை­யி­னாலும் ஜன­நா­யக புரட்­சி­யினாலும் வெற்றி பெற்று மீள்­எழுட்சி பெற்­ற­துடன் இன்று உல­கமே திரும்பிப் பார்க்கும் அள­வுக்கு கியூபா நாட்­டி­னது வளர்ச்சி உச்சம் பெற்று சர்­வ­தேச அளவில் காணப்­ப­டு­கின்றது.

அந் நாட்டு மக்­களின் தன்­னம்­பிக்­கையும் ஜன­நா­யக போராட்­டங்­களும் மற்றும் அரச தலை­வர்­களின் ஜன­நா­யக செயற்­பா­டு­க­ளுமே கியூ­பாவை இன்று ஒரு அபி­வி­ருத்தி நாடாக உல­க­ளவில் பேசவைத்துள்ளன.

கியூபா மீது அமெ­ரிக்­காவின் பேரின சக்­தி­க­ளினால் தொடுக்­கப்­பட்ட புரட்சி மூலம் எவ்­வாறு பொரு­ளா­தார தடை மற்றும் வன்­மு­றை­களை அமெ­ரிக்க அர­சானால் கட்­டவிழ்த்து விட­பட்­டதோ அவ்­வாறே இன்று இலங்­கைக்குள் சர்­வ­தேச விசா­ரணை , மனித உரி­மைகள் பிரச்­சினை என்ற போர்­வையில் சர்­வ­தேச சக்­தி­களை ஒன்று சேர்த்து ஒரு புரட்­சியை ஏற்­ப­டுத்த அமெரிக்கா முயற்சிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: