Home / இன்றைய செய்திகள் / சண்டை நிறுத்தத்தை மீறி பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை வீச்சு!!

சண்டை நிறுத்தத்தை மீறி பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை வீச்சு!!

c3e7688e-3b19-480b-b45c-59f40179726c_S_secvpfஇஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காஸாவில் ஆட்சி நடத்தும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 21 நாட்களாக சண்டை நடந்து வருகிறது. காஸாவில் பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரித்து வருவதால் முதலில் 12 மணி நேர சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டது.

பின்னர் 24 மணி நேரம் கூடுதலாக நீட்டித்து இஸ்ரேல் அறிவித்தது. ஆனால், அதை ஹமாஸ் தீவிரவாதிகள் ஏற்கவில்லை. இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு நடத்தினார்கள். எனவே சண்டை நிறுத்தம் மீறப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.

எனவே, இஸ்ரேல் மீண்டும் காஸா மீது தனது தாக்குதலை தொடங்கியது. அதை தொடர்ந்து ஹமாஸ் தீவிரவாதிகள் சண்டை நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தனர்.

ஆனால், அதை இஸ்ரேல் ஏற்கவில்லை. காஸா மீது ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதலை தொடங்கி விட்டது.

இதற்கிடையே வடக்கு காஸாவில் பொதுமக்கள் கூடும் பூங்கா மீது இஸ்ரேல் ராணுவம் வீசிய குண்டு விழுந்து வெடித்தது. அதே போன்று காஸாவில் உள்ள மிகப்பெரிய ஷிபா ஆஸ்பத்திரி மீது ஏவுகணை வீசப்பட்டது.

இத் தாக்குதலில் ஆஸ்பத்திரி இடிந்து தரை மட்டமானது. இந்த 2 தாக்குதல்களிலும் 10 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 8 பேர் குழந்தைகள். இவர்கள் தவிர 40 பேர் காயம் அடைந்தனர்.

குண்டு வீச்சில் பலியான குழந்தைகள் வடக்கு காஸா முகாம் அருகே உள்ள பூங்காவில் பொம்மை துப்பாக்கிகளுடன் விளையாடி கொண்டிருந்தனர். அவர்கள் குண்டுவீச்சில் உயிரிழந்தனர்.

மேலும், ஆஸ்பத்திரியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாக கருதி தவறான ஏவுகணை வீசப்பட்டது. அதில் பலர் படுகாயம் அடைந்ததாக தெரிகிறது. குண்டு வீச்சிலும் பாலஸ்தீனத்தில் இதுவரை 1100 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள்.

இஸ்ரேல் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ராக்கெட் வீச்சில் பொது மக்கள் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் காஸா எல்லையில் 10 இஸ்ரேல் ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 53 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சுரங்கப்பாதை வழியாக இஸ்ரேல் எல்லைக்கு சென்று ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றது தெரியவந்துள்ளது. இதற்கிடையே, ‘காஸா’ மீதான தாக்குதல் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாமு அறிவித்துள்ளார்.

தீவிரவாதிகளிடம் இருந்து தங்களது நாட்டு மக்களையும், ராணுவ வீரர்களையும் காக்க இத்தாக்குதல் மிக அவசியமானது.எனவே, போருக்கு தயாராக இருக்கும் படி ராணுவ வீரர்களை உஷார்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: