Home / இன்றைய செய்திகள் / கோல்டன் கீ வழக்கு விசாரணைகளில் இருந்து பிரதம நீதியரசர் மொஹன் பீரிஸ் விலகல்!!

கோல்டன் கீ வழக்கு விசாரணைகளில் இருந்து பிரதம நீதியரசர் மொஹன் பீரிஸ் விலகல்!!

1287482688Mohan-Peiris.3கோல்டன் கீ வழக்கு விசாரணைகளில் இருந்து தாம் விலகிக் கொள்வதாக பிரதம நீதியரசர் மொஹன் பீரிஸ் அறிவித்துள்ளார்.

தமக்கு கிடைக்கப் பெற்ற கடிதங்களைத் தொடர்ந்து தாம் இந்த வழக்கு விசாரணைகளிலிருந்து விலகிக் கொள்வதாக மொஹன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

செலிங்கோ கூட்டு நிறுவனங்களில் (கோல்டன் கீ) தாம் வைப்பிலிட்ட பணத்தை மீளப் பெறுவது தொடர்பில் பணம் வைப்பிலிட்டவர்களால் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைகளிலிருந்தே பிரதம நீதியரசர் விலகியுள்ளார்.

தான் இதற்கு முன்னதாக செலிங்கோ கூட்டு நிறுவனங்களின் தலைவராக கடமையாற்றியமையின் காரணமாகவும் இவ் விசாரணைக்குழுவிலிருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த வழக்கு விசாரணைகளை செப்டெம்பர் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்த பிரதம நீதியரசர், அத் தினத்தில் தாம் வழக்கு விசாரணை குழுவில் இடம்பெறப்போவதில்லை எனவும் அறிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பில் அடிப்படை உரிமை குறித்து 30 மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 2009/191 என்ற மனு விசாரிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அது தொடர்பில் வழங்கப்படும் தீர்ப்பு அனைத்துக்கும் பொருந்தும் எனவும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட முதற் தடவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை குழுவில் நீதிபதிகளாக ரோஹினி மாரசிங்க, டீ.பீ.அலுவிஹாரே மற்றும் மொஹான் பீரிஸ் ஆகியோர் செயற்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: