Home / இன்றைய செய்திகள் / குராம் ஷேய்க் கொலை வழக்கு தீர்ப்பில் நீதி கிடைத்தமை ஆறுதலை தரும் – நஸீர் ஷேய்க்!!

குராம் ஷேய்க் கொலை வழக்கு தீர்ப்பில் நீதி கிடைத்தமை ஆறுதலை தரும் – நஸீர் ஷேய்க்!!

8125516132222கொழும்பில் குராம் ஷேய்க் கொலை விசாரணையின் தீர்ப்பு தொடர்பாக அவரது சகோதரர் நஸீர் ஷேய்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவ் அறிக்கையின் முழு வடிவம்,

மக்கள் பலரும் நம்பியிருந்ததையும் மற்றும் பிரார்த்தித்திருந்ததையும், நாடு இன்று செய்துள்ளது.

எனது சகோதரனைக் கொன்றவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதோடு இப்பொழுது ஒரு நீண்ட காலத்துக்கு சிறையிலிடப்பட்டுள்ளனர்.

எங்களது பிரச்சாரம் நீதி குறித்தானதானது மட்டுமல்ல, அது, மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டு, உலகம் முழுவதிலுமாக எனது சகோதரன் செய்த அற்புதமான பணிகள் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்கானதுமாகும்.

அவர், பலருக்கும் ஒரு உண்மையான உள்ளுந்துதல் அளிப்பவராக இருப்பாரென்பதுடன் அவரது வழி வந்த இந்தப் பண்பு அவர் விட்டுச் சென்றவர்களிடம் தொடரும் எனவும் நாம் நம்புகிறோம்.

இந்த துக்ககரமான இழப்பை ஏற்று தேற்றிக் கொள்வது எங்களது குடும்பத்துக்கும் மற்றும் நண்பர்களுக்கும் கடினமானதாக இருக்கையில், நாங்கள் எதிர்பார்த்த நீதியை நாங்கள் அடைந்தது, இதில் ஈடுபட்ட அனைவருக்கும் ஒரு ஆறுதலை இன்று கொண்டு வருமென நான் நம்புகிறேன்.

எனது சகோதரனுக்கு ஏற்பட்ட கதி வேறெவரும் அனுபவிக்காதிருப்பதை உறுதிசெய்து, பலருக்கும் ஒரு சிறந்த இடமாக அமைவதற்கும் நாடு முன்னோக்கி நகர முடியும்.

உலகம் முழுவதிலும் இவிருந்து எனது இந்தத் தனிப்பட்ட பயணத்தில் இணைந்து கொண்டு அதற்கு மிகுந்த ஆதரவைத் தெரிவித்த இலங்கைப் பொதுமக்கள் உட்பட்ட, அனைவருக்கும் நான் நன்றி தெரிவிப்பதற்கு விரும்புகிறேன்.

எங்களது குடும்பத்துக்கான பதிலைத் தேடுவதில் உறுதுணையாக நின்ற பிரித்தானிய அரசாங்கத்துக்கும் நான் நன்றி தெரிவிப்பதற்கு விரும்புவதுடன், தீர்ப்பு வரைக்கும் வழக்கு விசாரணையை முன்கொண்டு சென்றமைக்காக இலங்கை அதிகாரிகளுக்கும், ஆனால் மிகவும் முக்கியமாக இந்த வழக்கில் சாட்சியங்கள் வழங்கியவர்களின் தைரியம் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பணிய மறுத்தமை என்பவற்றை அங்கீகரிக்கவும் செய்கிறேன்.

நாடு நீதியை வழங்கிய ஒரு நாளாக; ஒரு சகோதரனுக்கு எனது வாக்குறுதியை நான் நிறைவேற்றிய ஒரு நாளாக, இன்றைய நாள் ஒரு அடையாளமாக அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: