Home / இன்றைய செய்திகள் / கிழக்கு உக்ரைன் வான் வழியாக பறப்பதை தவிர்க்க முடிவு!!

கிழக்கு உக்ரைன் வான் வழியாக பறப்பதை தவிர்க்க முடிவு!!

373014103Untitled-1மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று புறப்பட்டு சென்றது.

உக்ரைன் நாட்டு வான் எல்லையில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, கிழக்கு உக்ரைனில் உள்ள ஷாக்தர்ஸ்க் நகருக்கு அருகில் ஏவுகணையின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த கொடூர சம்பவத்தில் 280 பயணிகள் 15 சிப்பந்திகள் என அந்த விமானத்தில் பயணித்த 295 பேரும் உடல் கருகி பலியாகினர்.

ஆசிய கண்டத்தில் இருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டுமாயின், உக்ரைன் வான் எல்லை வழியாக பறந்து செல்வது தூரம் குறைந்த பாதையாக கருதப்படுகிறது.

உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் பல்வேறு உள்நாட்டு விமானங்களை இப்பகுதியில் ஏற்கனவே சுட்டு வீழ்த்தி இருந்ததால், இந்த பாதையை சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து நீண்ட நாட்களாகவே நிலவி வந்தது.

இதற்கிடையில், மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு சில மணி நேரம் முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணித்த சிறப்பு விமானமும் இதே கிழக்கு உக்ரைன் வான் எல்லை வழியாகவே பறந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கிழக்கு உக்ரைன் வான் எல்லை வழியாக பறப்பதை இனி தவிர்க்கப் போவதாக இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா மற்றும் தனியார் விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் போன்றவை அறிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: