Home / இன்றைய செய்திகள் / கிழக்கு உக்ரைனில் 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்!!

கிழக்கு உக்ரைனில் 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்!!

556ba048-9eae-4cd5-a81d-e2f9036ac206_S_secvpfஉக்ரைனில் கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும் என்று ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் சேர்த்துக் கொண்டது. அத்துடன், மேலும் பல பகுதிகளை இணைத்துக் கொள்ளும் நோக்கத்தில் உக்ரைன் ராணுவத்துடன் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். இதனால் கிழக்கு பகுதியில் அமைதியிழந்து காணப்படுகிறது.

இந்த நிலையில், உக்ரைன் ராணுவத்தின் இரண்டு போர் விமானங்கள் இன்று பிற்பகல் சவூர் மோகிலா பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இதனை உறுதி செய்த உக்ரைன் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர், இரண்டு விமானங்களிலும் தலா இரண்டு விமானிகள் இருந்திருக்கலாம் என்று கூறினார்.

ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தங்கள் நிலைகளை விட்டு வெளியேறி, தற்போது டொனெட்ஸ்க் நகரின் மத்திய பகுதியை நோக்கி முன்னேறி வருகின்றனர். இதனால் கடந்த இரண்டு தினங்களாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

கிழக்கு உக்ரைனில் 298 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு வாரத்திற்குள் இந்த எதிர் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: