Home / இன்றைய செய்திகள் / கிரிக்கெட் மட்டையால் அரசியல்வாதி தாக்குதல்: முதியவர் வைத்தியசாலையில்!!

கிரிக்கெட் மட்டையால் அரசியல்வாதி தாக்குதல்: முதியவர் வைத்தியசாலையில்!!

1718847670fighமேல் மாகாண பிரபல அரசியல்வாதி உள்ளிட்ட குழுவினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மெல்வத்த, நாவல கொஸ்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த டீ.எம். பியசேன என்ற 69 வயதான நபரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

நேற்று இரவு குறித்த நபர் அரசியல்வாதிக்கு சொந்தமான வீட்டு காணியில் உள்ள இளநீர் மரத்தில் இளநீர் பறித்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தான் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டதாக அந்நபர் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் நேற்று இரவு 10 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் தெரண மேற்கொண்ட தேடுதலின்போது, அரசியல்வாதி ஒருவரால் தாக்குதலுக்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: