Home / இன்றைய செய்திகள் / காரைநகர் சிறுமிகள் வழக்கு – 31ம் திகதிக்கு ஒத்திவைப்பு!!

காரைநகர் சிறுமிகள் வழக்கு – 31ம் திகதிக்கு ஒத்திவைப்பு!!

1177825488Untitled-1காரைநகர் – ஊரி பிரதேசத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 31ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்றில் இன்று அவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாதிக்கப்பட்ட சிறுமியோ அல்லது சிறுமி சார்பாகவோ யாரும் சமூகமளிக்கவில்லை.

பிணையில் விடுவிக்கப்பட்ட 7 சந்தேகநபர்களுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதனை அடுத்து நீதவான் எதிர்வரும் 31ம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

காரைநகர் ஊரி பிரதேசத்தை சேர்ந்த 11வயது மற்றும் 9 வயது சிறுமிகள் இருவர் கடற்படை சிப்பாய் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

அச் சம்பவம் தொடர்பில் அந்தப் பிரதேசத்தில் உள்ள கடற்படை முகாமில் கடைமையாற்றிய 7 சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு, கடந்த 18ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் அவர்கள் ஏழ்வரையும் கடந்த 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன் பிரகாரம் கடந்த 21ம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில், சிறுமியால் குறித்த கடற்படை சிப்பாயை அடையாளம் காட்டப்படவில்லை.

இதனையடுத்து அன்றைய தினம் 7 சந்தேகநபர்களையும் நீதிபதி பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கினை இன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: