Home / இன்றைய செய்திகள் / காபூல் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்!!

காபூல் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்!!

1807937548airஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்தி வந்த ஆட்சியை கடந்த 2001–ம் ஆண்டு அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வந்தது. இதையடுத்து அங்கு கர்சாய் தலைமையில் புதிய ஆட்சி நடந்து வருகிறது. அங்கு தேர்தல் நடத்தப்பட்டு, ஜனநாயக பாதைக்கு நாடு திரும்பியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தலிபான் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் மார்க்கெட்டில் நடந்த கார் குண்டு தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர். தலிபான்களுக்கு காபூலில் உள்ள நேட்டோ படை வீரர்கள் மட்டுமே பெரும் தடையாக உள்ளனர். இதனால் நேட்டோ படை வீரர்கள் வந்து செல்லும் காபூல் சர்வதேச விமான நிலையத்தை குறி வைத்து தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வாரத்துக்கு ஒரு தடவையாவது காபூல் விமான நிலையத்தை தாக்குவதாக தலிபான் தீவிரவாதிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை காபூல் விமான நிலையம் மீது தலிபான் தீவிரவாதிகள் மிகப்பெரும் தாக்குதலை நடத்தினார்கள். வழக்கமாக ராக்கெட் ஏவி தாக்கும் தீவிரவாதிகள் இன்று அந்த பாணியில் இருந்து மாறி, விமான நிலையம் அருகில் உள்ள கட்டிடங்களில் புகுந்து குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினார்கள்.

காபூல் விமான நிலையத்தில் வடக்கு பகுதியில் உள்ள கட்டிடத்துக்குள் இருந்து விமான நிலைய ஓடுபாதை மீது குண்டுகள் வீசப்பட்டன. உடனடியாக அந்த பகுதிக்கு ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் அதிரடிப்படை விரைந்தது.

நேட்டோ படை வீரர்களும் காபூல் விமான நிலையத்தை சுற்றி அரண்போல நின்றனர். அவர்களுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே பல மணி நேரம் தொடர்ந்து கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

விமான நிலைய பகுதி கட்டிடத்துக்குள் புகுந்து இருப்பது தலிபான் தீவிரவாதிகளின் தற்கொலை படை என்று தெரிய வந்துள்ளது. ஆனால் எத்தனை தீவிரவாதிகள் விமான நிலைய தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவில்லை.

தீவிரவாதிகள் கார்களை வெடிக்க வைத்து வருகிறார்கள். அதோடு அடுத்தடுத்து குண்டுகளை வெடிக்க வைப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் தாங்கள் பதுங்கி இருக்கும் கட்டிடத்துக்குள்ளும் குண்டுகளை வெடித்தனர். இதனால் காபூல் விமான நிலைய பகுதியில் வானில் கரும்புகை சூழ்ந்துள்ளது.

இதையடுத்து காபூல் நோக்கி வந்த விமானங்கள் அனைத்தும், ஆப்கானிஸ்தானில் உள்ள மற்ற நகரங்களான மசர்–ஐ–செரீப், ஹீரட் நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

தலிபான் தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்த ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்துவதால் அவர்களை முதலில் நெருங்க முடியவில்லை.

இதையடுத்து நேட்டோவின் அதிரடிப்படை தீவிரவாதிகள் உள்ள கட்டிடத்தை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்துறை மந்திரி சித்திக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: