Home / இன்றைய செய்திகள் / காணாமல்போன பெண் மயானத்திலிருந்து சடலமாக மீட்பு!!

காணாமல்போன பெண் மயானத்திலிருந்து சடலமாக மீட்பு!!

834843130police-crime2கடந்த முதலாம் திகதியிலிருந்து காணாமல்போன பெண் இன்று (21) அநுராதபுரம், மரதன்கடவல பிரதேசத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த முதலாம் திகதி தொடக்கம் காணாமல் போனதாக அவரது உறவினர்களால் கெக்கிராவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அப் பெண்ணின் சடலம் மருதன்கடவல மயானத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் அப்பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெக்கிராவ, யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான குறித்த பெண்ணின் கணவனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கெக்கிராவ பொலிஸார் எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: