Home / இன்றைய செய்திகள் / காசா மீதான தாக்குதல் எதிரொலி: இஸ்ரேல் செல்லும் அமெரிக்க விமானங்கள் ரத்து!!

காசா மீதான தாக்குதல் எதிரொலி: இஸ்ரேல் செல்லும் அமெரிக்க விமானங்கள் ரத்து!!

94696936-4eed-414e-8705-3bb496c2bb4b_S_secvpfஇஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் தொடர் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இஸ்ரேல் வாலிபர் மர்மமான முறையில் பாலஸ்தீனத்தில் மரணம் அடைந்தார். இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தியது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக காசா போராளிகள் இஸ்ரேலை தாக்க ஆரம்பித்தனர். இதனால் கடந்த இரண்டு வாரங்களாக காசா மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றது. இத்தாக்குதலில் இதுவரை 600-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடைபெற்று வருவதால் பயணிகளின் பாதுகாப்பு கருதி இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமானத்துறை வழங்கிய அறிவுரையின் பேரில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கர்களின் பாதுகாப்பு கருதியே விமான நிறுவனங்கள் தற்காலிகமாக சேவையை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: