Home / இன்றைய செய்திகள் / காசா போரில் சாவு எண்ணிக்கை 330-ஐ தாண்டியது: சமரசம் செய்ய பான் கி மூன் விரைகிறார்!!

காசா போரில் சாவு எண்ணிக்கை 330-ஐ தாண்டியது: சமரசம் செய்ய பான் கி மூன் விரைகிறார்!!

f3bb3a6a-b9a5-438a-83f9-9da0c903bb6a_S_secvpfஇஸ்ரேல்-ஹமாஸ் போராளிகளுக்கிடையிலான சண்டை 12-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. காசாவின் முக்கிய பகுதிகள் மீது விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி வந்த இஸ்ரேல் இப்போது தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த சண்டையில் இதுவரை 333 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் டாங்கிகளும், வீரர்களும் காசாவிற்குள் புகுந்து உக்கிரமான தாக்குதல் நடத்தி வருவதால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காசாவில் உள்ள 40 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிவிட்டனர்.

நிலைமை மோசமடைந்து வருவதால் இரு தரப்பினரையும் சந்தித்து மத்தியஸ்தம் செய்வதற்காக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் விரைவில் அங்கு செல்ல உள்ளார். வன்முறையை கைவிட்டு முன்னேற்றத்திற்கான வழியை கண்டுபிடிக்க இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் உதவும் வகையில் பான் கி மூனின் இந்த பயணம் அமையும் என்று ஐ.நா. அரசியல் விவகாரங்கள் பிரிவு தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: