Home / இன்றைய செய்திகள் / காசாவிற்கு 47 மில்லியன் டாலர் நிதியுதவி: ஜான் கெர்ரி உறுதி!!

காசாவிற்கு 47 மில்லியன் டாலர் நிதியுதவி: ஜான் கெர்ரி உறுதி!!

cba2f196-5239-4bfa-b807-b5ad527aa75f_S_secvpfஇஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே ஏற்கனவே எல்லைப் பிரச்சினை இருந்துவந்த நிலையில் கடந்த மாத இறுதியில் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது மீண்டும் அந்தப் பகுதியில் பிரச்சினைகளைத் தொடங்கி விட்டுள்ளது.

காசா பகுதியில் வாழும் ஹமாஸ் போராளிகளே இந்தக் கடத்தலுக்குக் காரணம் என்று கூறும் இஸ்ரேல் அவர்களை அழிப்பதற்கான தாக்குதலை ஒரு வாரத்திற்கும் மேலாக நடத்தி வருகின்றது. 15-வது நாளை எட்டியுள்ள இந்தத் தாக்குதலில் இதுவரை 5௦௦-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமான மக்கள் அங்கிருந்து வெளியேறியும் வருகின்றனர்.

இந்தத் தாக்குதலினால் காசா பகுதியில் அத்தியாவசிய வசதிகளின்றித் தவிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு உதவும் விதமாக 47 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்தார். ஐ.நா தலைவர் பான் கி மூனை நேற்று எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தபோது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்ரேல் எடுத்துள்ள சரியான மற்றும் நியாயமான முயற்சிகளின் விளைவுகளைப் பற்றித்தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக கெர்ரி தெரிவித்தார். ஏவுகணைகளால் தாக்கப்படுவதையும், நாட்டிற்குள்ளே புகுவதற்காக சுரங்கங்கள் அமைக்கப்படுவதையும் எந்த நாடும் பார்த்துக் கொண்டிருக்காது.

ஆனாலும், எத்தகைய தாக்குதலிலும், பெண்கள், குழந்தைகள் அடங்கிய பொதுமக்கள் சமூகம் சிக்கிக் கொள்வது கவலையைத் தருகின்றது என்று கெர்ரி குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி உதவியில் 15 மில்லியன் டாலர் பாலஸ்தீனிய அகதிகள் முகாமான யுஎன்ஆர்டபிள்யுஏவிற்கு அளிக்கப்படும். இந்த நெருக்கடிக்காக அவர்கள் கேட்டிருந்த 60 கோடி டாலரில் ஒரு பகுதித் தொகையாக இந்த உதவி அளிக்கப்படும்.

இதுபோக பாக்கி 32 மில்லியன் டாலரில் ஏற்கனவே 10 மில்லியன் டாலர் பாலஸ்தீனியர்களுக்கு உதவித்தொகையாக அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீதித் தொகை உடனடி சர்வதேச அபிவிருத்திகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: