Home / இன்றைய செய்திகள் / கடற்கரையில் அவசரமாக தரை இறங்கிய விமானம்!!

கடற்கரையில் அவசரமாக தரை இறங்கிய விமானம்!!

392184650planeஅமெரிக்காவின் புளோரிடா பகுதியில் உள்ள வெனிஸ் கடற்கரையோரம் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம் மோதி ஒருவர் பலியானார்.

அப்பகுதி கடலில் நீந்தி குளித்து விட்டு ஏராளமானோர் மணலில் சாய்ந்தபடி சூரிய குளியலில் ஈடுபட்டிருந்த போது கடற்பகுதியின் மீது வட்டமடித்து பறந்துக் கொண்டிருந்த ஒரு சிறிய ரக தனியார் விமானம் அவசரமாக தரையிறங்க முயற்சித்தது.

அப்போது மணலில் படுத்திருந்த ஒருவர் மீது மோதியதில் காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: