Home / இன்றைய செய்திகள் / எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க!!

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க!!

cjsஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும்படி முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு உத்தியோகபூர்வமான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள வாரப்பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 24ஆம் திகதி கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற மாதுலூவாவே சோபித்த தேரர் தலைமையிலான நீதியான சமூகத்துக்கான தேசிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான புத்தி ஜீவிகளின் கருத்தரங்கு என்ற வைபவத்தில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த வைபவத்துக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல தலைவர்களும் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர்.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த மாதுலுவாவே சோபித தேரர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட பொது வேட்பாளர் பட்டியலில் ஷிராணி பண்டாரநாயகவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ரணில் விக்கிரமசிங்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடத் தயாராவது தொடர்பாக கருத்து தெரிவித்ததன் பின்னர் எதிர்க்கட்சிகளின் கட்சி சார்பற்ற பொது வேட்பாளரின் அவசியம் குறித்து பரவலாக பேசப்பட்டது. இதற்காக முன்னாள் நீதியரசர் பொருத்தமானவர் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். அதேபோல் அவர் நீதியரசர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர் கடந்த 24ம்திகதி வரை எந்தவொரு பகிரங்க அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: