Home / இன்றைய செய்திகள் / எகிப்து: சோதனைச் சாவடி மீது தாக்குதல்- 20 ராணுவ வீரர்கள் பலி!!

எகிப்து: சோதனைச் சாவடி மீது தாக்குதல்- 20 ராணுவ வீரர்கள் பலி!!

57f88252-3d0c-4cb1-9257-ccc7fbccc909_S_secvpfஎகிப்து தலைநகர் கெய்ரோவின் மேற்கில் சுமார் 630 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாலைவனப் பிரதேசத்தில் ஃப்ராஃப்ரா- கெய்ரோ நெடுஞ்சாலையில் அரசுக்கு சொந்தமான வாகன தணிக்கை சோதனைச் சாவடி ஒன்றுள்ளது.

எகிப்துடன் சூடான், லிபியா ஆகிய நாடுகளை இணைக்கும் எல்லைப் பகுதியான இந்த சோதனைச் சாவடி மீது நேற்று ஆயுதமேந்தி வந்த சிலர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தினர்.

சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் எகிப்து ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சியை பதவியை விட்டு இறக்கி, கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலின் மூலம் முன்னாள் ராணுவ தளபதியான அப்துல் ஃபத்தா அல் சிசி புதிய திபராக பதவி ஏற்ற பிறகு மோர்சிக்கு ஆதரவான சில போராளிக் குழுவினர், எகிப்தின் அரசுப் படைகளை குறி வைத்து இதைப் போன்ற அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய தாக்குதலுக்கு இதுவரை எந்த போராளி குழுவும் பொறுப்பேற்றுக் கொள்ளாத நிலையில், பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் 3 நாள் துக்கம் அணுசரிக்கப்படும் என்று எகிப்து அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: