Home / இன்றைய செய்திகள் / உணவில் விஷம் – கார்த்தி ஆஸ்பத்திரியில்!!

உணவில் விஷம் – கார்த்தி ஆஸ்பத்திரியில்!!

Karthiநடிகர் கார்த்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 30 நாட்களாக அவர் கமுதியில் நடந்த ‘கொம்பன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார். அவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்தார். முத்தையா டைரக்டு செய்தார்.

கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு படமாக்கி முடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கார்த்தி சென்னை திரும்பினார்.

நேற்று மாலை 6.30 மணிக்கு அவர் சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உணவில் விஷம் காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. கார்த்தி மிகவும் களைப்பாக இருந்ததால், அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: