Home / செய்திகள் / இந்திய செய்திகள் / ஈழத் தமிழர் விடயம் – ஜெ.யிடம் ராமதாஸ் கோரிக்கை!!

ஈழத் தமிழர் விடயம் – ஜெ.யிடம் ராமதாஸ் கோரிக்கை!!

1264957424Untitled-1பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு அதன் தவறுகளைத் திருத்திக் கொள்ள 5 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தும் திருந்தாத நிலையில்தான் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது.

ஈழத் தமிழர் நலன் சார்ந்த எந்தக் கடமையும் இல்லாத அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் இதற்கு ஆதரவளிக்கும் நிலையில், ஈழத்தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகளைக் கொண்ட இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல.

ஈழத் தமிழர் நலன் காப்பதாக கூறிவந்த பாரதிய ஜனதா கட்சி, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளை அட்சரம் பிசகாமல் பின்பற்றுவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

இலங்கையுடன் இராணுவ உறவு கூடாது என்ற தமிழகத்தின் கோரிக்கையும் புறந்தள்ளப்பட்டு, இந்திய வான்படைத் தளபதி அருப் ராகா நேற்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இராணுவ உத்திகள் குறித்து இலங்கைப் படையினருக்கு ஆலோசனை வழங்கவிருக்கும் அவர், இலங்கை ஜனாதிபதியையும் சந்தித்து பேச விருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வளவுக்கு பிறகும் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை குறித்த வெளியுறவுத் துறையின் நிலைப்பாடு குறித்து தமிழக முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருப்பது பல்வேறு யூகங்களை ஏற்படுத்துகிறது.

உலகின் மிகக்கொடிய இனப்படுகொலையை நடத்திய மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டுமானால், அதற்காக ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டு உரக்க குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

எனவே, இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும்.

தேவைப்பட்டால் அந்த விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டப் பேரவையில் தமிழக அரசின் சார்பில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

தீர்மானத்தின் அம்சங்களை உரிய முறையில் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று செயல்படுத்தவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: