Home / இன்றைய செய்திகள் / இஸ்ரேல் போர்க் குற்றங்களைப் புரிய வலுவான வாய்ப்பு உள்ளது!!!

இஸ்ரேல் போர்க் குற்றங்களைப் புரிய வலுவான வாய்ப்பு உள்ளது!!!

27744660Untitled-1அரபு நாடுகளான பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே ஏற்கனவே எல்லைப் பிரச்சினை இருந்து வருகின்றது.

இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டு சடலமாக மீட்கப்பட்டது இஸ்ரேலின் கோபத்தைக் கிளறியது.

காசா பகுதியில் செயல்பட்டுவரும் ஹமாஸ் போராளிகளே இதற்குக் காரணம் என்று கருதிய இஸ்ரேல் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

இதில் குறைந்தது 649 பாலஸ்தீனியர்களும், 31 இஸ்ரேலியர்களும் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தத் தாக்குதலை நிறுத்தும்படி அமெரிக்கா உள்பட பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தத் தாக்குதல் குறித்த அறிக்கை ஒன்றை ஜெனீவாவில் நடைபெற்ற அவசரக் கூட்டம் ஒன்றில் ஐ.நா. மனித உரிமைக் குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை வெளியிட்டார்.

சர்வதேச விதிமுறைகளை மீறுவதால் இஸ்ரேல் போர்க் குற்றங்களைப் புரிவதற்கான வலுவான வாய்ப்பு இருப்பதாகத் தெரிய வருகின்றது என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், ஐ.நா. மனித உரிமைக் கழகம் பாரபட்சமாகச் செயல்படுவதாகக் கூறும் இஸ்ரேல் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு ஐ.நா விசாரணையுடனும் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி சமாதானப் பேச்சு வார்த்தைக்கு உதவும்விதமாக இன்று இஸ்ரேல் வந்துள்ளார். அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தங்கள் நாட்டு விமானங்கள் இஸ்ரேலில் இறங்குவதற்கு 24 மணி நேரத் தடை விதித்துள்ள போதிலும் டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இவர் தரையிறங்கி உள்ளார்.

காசாவிலிருந்து வீசப்பட்ட ஏவுகணை ஒன்று விமான நிலையத்தின் அருகில் விழுந்ததைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நிறுவனங்கள் தங்களின் விமான சேவைகளை இங்கு இரத்துச் செய்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: