Home / இன்றைய செய்திகள் / இவங்க இப்ப ரொம்ப பிஸியாம்…!!

இவங்க இப்ப ரொம்ப பிஸியாம்…!!

sonaமலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ‘ஆமையும் முயலும்’ என்ற மலையாள படத்தில் நடிக்கிறார் சோனா.

இதுவரை கிளாமர் மற்றும் வில்லி வேடங்களில் நடித்து வந்த சோனா, தான் நடிக்கும் இந்த படத்தில் முழு நீள கதாபத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்தப் படம் மலையாள மொழியில் உருவாக உள்ளது.

கதை கேட்டு, அதில் தன்னுடைய கேரக்டர் பிடித்துப்போனதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று நடிகை சோனா தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல் மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் கே.கே.ஹரிதாஸ் இயக்கத்தில் ‘திலீப் விவாஹிதனயாள்’ என்ற படத்திலும் சோனா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் 18 முதல் தொடங்குகிறது.

மேலும், தமிழில் ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ‘ஜித்தன்-2’ படத்திலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் சோனா நடிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: