Home / இன்றைய செய்திகள் / இலங்கை வைத்தியர், தாதியர் சேவை பெற்றுத் தருமாறு மாலைதீவு கோரிக்கை!!

இலங்கை வைத்தியர், தாதியர் சேவை பெற்றுத் தருமாறு மாலைதீவு கோரிக்கை!!

Doctor holding out his stethoscopeமாலைதீவுக்கு இலங்கை வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களின் சேவையை பெற்றுத் தருமாறு அந்நாட்டு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சர் மைத்தியால சிறிசேனவிடம், மாலைதீவு சுகாதார அமைச்சர் வைத்தியர் மரியா சகீலா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மாலைதீவில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு பாரிய வெற்றிடம் நிலவுவதன் காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மரியா சகீலா தெரிவித்துள்ளார்.

தான் இந்த கோரிக்கையை வேறு எந்த நாட்டிலும் விடுக்கவில்லை எனவும் இலங்கை வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் உயர்ந்த சேவையை கருத்திற் கொண்டு இலங்கையிடம் கோரியுள்ளதாக மாலைதீவு சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: