Home / இன்றைய செய்திகள் / இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் – பாஜக!!

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் – பாஜக!!

291829243bjp3இலங்கையும் இந்தியாவும் இரு தரப்பு வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமானால், இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்று இந்தியா, இலங்கையிடம் தெரிவித்துள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சேஷாத்ரி ஷாரி இதனை இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை தாம் இலங்கை அரசாங்கத்திடம் தெளிவாக கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் விடயத்திலும் இந்தியா தெளிவான போக்கை கொண்டுள்ளது.

அருணாச்சல் பிரதேசம் தொடர்பில் எந்தவொரு பேச்சுக்கும் இடமில்லை என்பதை சீனாவுக்கு வலியுறுத்தியுள்ளதாக ஷாரி குறிப்பிட்டுள்ளார்.

அருணாச்சல் பிரதேசம் இந்தியாவினுடையது. எனவே சீனா அதனைப் பற்றி கவலை கொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜவஹர்லால் நேருவின் காலத்தில் இருந்து இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் ஷாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: