Home / இன்றைய செய்திகள் / இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்ககோரி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்!!

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்ககோரி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்!!

1557381800fisherman-new2இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி விசைப்படகு ஆவணங்களை ஒப்படைத்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பிடிக்கப்பட்ட 55 படகுகளை விடுவிக்க வேண்டும், பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமைகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.

இதற்காக, மீனவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த போராட்டத்தால் 5 ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்களும் 20 ஆயிரம் மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இலங்கையின் மன்னார் பகுதியில் அந்நாட்டு மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

அதில், தமிழக மீனவர்களின் பேச்சுவார்த்தையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: