Home / இன்றைய செய்திகள் / இலங்கை இளைஞன் கொலை: பிரித்தானிய பிரஜைகள் இருவருக்கு சிறை!!

இலங்கை இளைஞன் கொலை: பிரித்தானிய பிரஜைகள் இருவருக்கு சிறை!!

201767776622இலங்கை பிரஜை ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பிரித்தானிய பிரஜைகள் இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு பிரித்தானிய சென்ற 25 வயதான தவிச பீரிஸ் என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இரு பிரித்தானியர்களுக்கே சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு 23 மற்றும் 24 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளில் ஒருவரான கஜீப் அகமட் என்ற 18 வயது இளைஞன் தாம் கொலை செய்ததாக கடந்த 7ஆம் திகதி நீதிமன்றில் ஒப்புக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இளைஞன் கல்விக்காக லண்டன் சென்று பணம் உழைக்கவென அங்கு பீட்சா விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை கொலை செய்யப்பட்டுள்ளார்.

2011ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற பீரிஸ், அங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்று தகுதிக்கு ஏற்ற தொழில் கிடைக்கும் வரை கடந்த ஒன்றரை வருடங்களாக பீட்சா விற்கும் வேலையில் முழு நேரம் ஈடுபட்டு வந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: