Home / இன்றைய செய்திகள் / இலங்கை அகதிகள் 157 பேரை ஆஸி.க்கு அனுப்பிய மேலும் இருவர் கைது!!

இலங்கை அகதிகள் 157 பேரை ஆஸி.க்கு அனுப்பிய மேலும் இருவர் கைது!!

110769058122இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியாவிற்கு கடத்திய சந்தேகத்தின் பேரில் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி பொலிஸ் சீ.பி.-சீ.ஐ.டி. பிரிவினர் குறித்த இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். புதுச்சேரியிலிருந்து படகு மூலம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு 157 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை படகு மூலம் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருஞ்சிப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜீ மற்றும் வாம்பாகீர் பாளையத்தைச் சேர்ந்த மான்ஜினி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் படகு உரிமையாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளின் தகவல்களுக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்பய்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கை அகதிகள் சென்ற படகின் உரிமையாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னதாகவும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: