Home / இன்றைய செய்திகள் / இலங்கை அகதிகள் கடலில் தடுத்து வைக்கப்பட்டமை சரியானதே – அவுஸ்திரேலியா!!

இலங்கை அகதிகள் கடலில் தடுத்து வைக்கப்பட்டமை சரியானதே – அவுஸ்திரேலியா!!

1262389967tony3இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அகதிகளை கடலில் தடுத்து வைக்கப்பட்டமை சரியானதே என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேரை, அந்நாட்டு அதிகாரிகள் கடலிலேயே தடுத்து வைத்திருந்தனர்.

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலேயே சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடல் பாதுகாப்பு விதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு படகும் சர்வதேச ஆட்கடத்தல்காரர்களை ஊக்குவிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் எந்தவொரு நபருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: