Home / இன்றைய செய்திகள் / இந்தோனேசியாவின் புதிய அதிபராக ஜோகோ விடோடோ தேர்வு!!

இந்தோனேசியாவின் புதிய அதிபராக ஜோகோ விடோடோ தேர்வு!!

b8a27e2a-15de-49ce-8919-cf1df25cc6ee_S_secvpfஉலகில் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடாகக் கருதப்படும் இந்தோனேசியாவில் இந்த மாதம் 9ஆம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.கடந்த 1998ஆம் ஆண்டு இங்கு முடிவுக்கு வந்த சுகர்தோ சகாப்தத்திற்குப் பின்னர் மிகப் பெரிய பிரிவினையை வெளிப்படுத்திய தேர்தலாக இது அமைந்தது.

சீர்திருத்தவாதியாக விளங்கிய ஜகார்த்தாவின் ஆளுநரான ஜோடோ விடோடோவும், முன்னாள் ராணுவ வீரரான பிரபோவோ சுபியன்டோவும் இந்தத் தேர்தலின் பிரதான வேட்பாளர்களாகக் களமிறங்கினர். இருவருமே வெற்றி வாய்ப்பு தங்களுடையது என்று கூறிவந்தபோதிலும் முக்கிய தேர்தல் முகவர்கள் விடோடோவிற்கான வெற்றி வாய்ப்பையே வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் இறுதி அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக நேற்று முன்தினம் இந்தப் போட்டியிலிருந்து தான் விலகுவதாக பிரபோவோ அறிவித்தார். விடோடோ அணியினர் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றச்சாட்டுகளைக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி முடிவு ஜோடோ விடோடோவை வெற்றியாளராக அறிவித்துள்ளது.இவர் பிரபோவோவைவிட ஆறு சதவிகிதம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

முன்னாள் தளவாட ஏற்றுமதி தொழிலதிபரான விடோடோ ஜகர்த்தாவின் ஆளுநராகப் பணியாற்றியபோது அவரது பொதுத் தொடர்பின் மூலம் பெற்றிருந்த ஏகோபித்த ஆதரவாளர்களின் வாக்குகள் மூலமே இந்த வெற்றி வித்தியாசம் பெறப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: