Home / இன்றைய செய்திகள் / இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்ட மூன்று பெண்கள் கைது!!

இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்ட மூன்று பெண்கள் கைது!!

178329035Untitled-1சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட 10 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியான தங்கத்துடன் மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் இருபெண்கள் தமது பயணப் பையில் இரண்டு தங்கக் கட்டிகள் மற்றும் 4 தங்கச் சங்கிலிகளை மறைத்து வைத்து, பெங்களூருக்கு செல்ல முற்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 1 கிலோ 707 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்கள் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை சென்னைக்கு தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்ட மற்றுமொரு பெண்ணும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் வசமிருந்து 458 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: