Home / இன்றைய செய்திகள் / இந்தியாவிற்கு செல்ல விசா கோரவில்லை! ஐ.நா குழு!!

இந்தியாவிற்கு செல்ல விசா கோரவில்லை! ஐ.நா குழு!!

1862076876Untitled-1இந்தியாவிற்கு செல்ல விசா கோரவில்லை என இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையின் குழு தெரிவித்துள்ளது.

குறித்த விசாரணைகளை மேற்கொள்ள இந்தியா விசா வழங்க மறுத்ததாக வௌியான தகவல்கள் தொடர்பில் கருத்து வௌியிடுகையிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையால் குழுவென்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என இதுவரை இலங்கை அரசு கூறிவருகின்றது.

இதனால் மூன்று நாடுகளில் விசாரணைகளை மேற்கொள்ள இவர்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

இந்தநிலையில் சர்வதேச விசாரணைக் குழுவினர் இந்தியாவுக்குள் பிரவேசிக்க விசா கோரியதாகவும் இந்தியா அதனை மறுத்ததாகவும் அண்மையில் செய்திகள் வௌியானமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறு இருப்பினும் குறித்த குழுவினருக்கு இந்தியாவிற்கு செல்ல விசா வழங்குமாறு, தமிழக முதல்வர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: