Home / இன்றைய செய்திகள் / அமானுஷ்ய சக்தியின் தாக்கத்தை அசைபோடும் ஜீரோ!!

அமானுஷ்ய சக்தியின் தாக்கத்தை அசைபோடும் ஜீரோ!!

aa09882f-839c-43ca-840f-c2efcfb9c2c9_S_secvpf‘மங்காத்தா’, ‘ஏழாம் அறிவு’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களில் நடித்தவர் அஷ்வின். இவர் தற்போது நடிக்கும் படம் ‘ஜீரோ’. இதில் இவருக்கு ஜோடியாக ‘நெடுஞ்சாலை’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஷிவதா நடிக்கிறார். ஜே.டி.சக்ரவர்த்தி, துளசி, ரவி ராகவேந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். பாபு குமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார். அறிமுக இயக்குனர் அருண் குமார் இயக்குகிறார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறும் போது, “உலகம் தோன்றும் போது ஜீரோவில் தொடங்கியது. அதனால் இப்படத்திற்கு ஜீரோ என்று தலைப்பு வைத்தேன். உலகம் தோன்றும் போது அமானுஷ்ய சக்தியும் தோன்றியது. அதேபோல் ஆனந்தமாக வாழ்ந்து வரும் இளஞ்ஜோடிகளின் வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக ஒரு அதீத பலம் வாய்ந்த சக்தி குறுக்கிடுகிறது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் நடைபெறும் நிகழ்வுகளே படத்தின் கதை. எனக்கு திகில், பேய் நிறைந்த படங்கள் எடுக்க ஆர்வமாக இருந்தது. அதுதான் இப்படத்தை இயக்குவதற்கு முக்கிய காரணம்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பின்னிமில்லில் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஏ.வி.எம் ஸ்டுடியோ, மகாபலிபுரம், அண்ணாநகர் மற்றும் சென்னையின் முக்கிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது. இறுதிகட்ட படப்பிடிப்புகளை வட இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இப்படத்தை நவம்பர் மாதம் திரையிட உள்ளோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: