Home / இன்றைய செய்திகள் / அப்பா பெயரைக் கெடுத்து விடுவார் சூர்யா! பார்த்திபன் பரபரப்பு!!

அப்பா பெயரைக் கெடுத்து விடுவார் சூர்யா! பார்த்திபன் பரபரப்பு!!

Untitled-121எந்த ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சென்றாலும் தனது முத்திரைப்பேச்சினை பதித்துவிட்டு வருபவர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன்.
இவருடைய புத்திசாலித்தனமான பேச்சைக் கேட்பதற்காகவே அனைத்து ஆடியோ விழாக்குழுவினர்களும் பார்த்திபனுக்கு அழைப்பு விடுக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
அவரும் விழாக்குழுவினர்களை ஏமாற்றாமல் அனைவரையும் அசத்தும்படி பேசிவிட்டு வருவார். இந்த வரிசையில் சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த ‘அஞ்சான்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் விழாவிலும் அவர் கலந்து தனது முத்திரை உரையை அளித்தார்.

பார்த்திபன் இந்த விழாவில் பேச ஆரம்பித்ததும், “சூர்யா வளர, வளர அவருடைய அப்பா சிவகுமார் பேரை கெடுத்துடுவார்னு நினைக்கிறேன்” என்று ஆரம்பித்தவுடன் ஒரு அதிர்ச்சி குண்டை தூக்கிப்போட்டார். சூர்யா உள்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருந்தபோது, அதற்கு அவர் விளக்கம் கொடுத்தார்.
“அதாவது, சினிமாவில அடக்கம், அமைதி, பணிவுக்கு பெயர் போனவர் சிவகுமார். அவரை முந்திக்கொண்டு இப்போ சூர்யா எல்லா விழாக்களிலும், எல்லோரிடமும் ரொம்ப அடக்கமாகவும், அமைதியாகவும், பணிவோடும் நடந்து கொள்கிறார்” என்று விளக்கம் அளித்தார்.

இந்த விளக்கத்திற்கு பின்னர்தான் சூர்யா உள்பட மேடையில் இருந்த அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
மேலும், அவர் பேசும்போது, “நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு வந்த சூர்யா, நான் உங்ககூட நடிக்கிறேன்னு தெரியுமா? என்று என்னிடம் கேட்டார். ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் நான் நடிப்பதை, அவர் என்னுடன் நடிப்பதாக கேட்டது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் இணைந்து நடிப்பதை இந்த பிறந்தநாளில் சூர்யா தனக்கு கொடுத்த விருந்தாக எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: