Home / இன்றைய செய்திகள் / அனுர குமாரவின் சாரதி கைது!!

அனுர குமாரவின் சாரதி கைது!!

12மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரத்தினபுரி – கிரிஎல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தின் பின்னர், இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

கவனயீனத்துடன் வாகனத்தை செலுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதோடு, இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

நேற்று முற்பகல் 10.30 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த அநுரகுமார திஸாநாயக்க இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி – ஹொரண வீதியில் மண் ஏற்றிச் சென்ற டிப்பருடன் இவரது வாகனம் மோதியதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் அநுரகுமார திஸாநாயக்கவின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: