Home / இன்றைய செய்திகள் / அநுரகுமார திஸாநாயக்க வைத்தியசாலையில்!!

அநுரகுமார திஸாநாயக்க வைத்தியசாலையில்!!

1993125837anurakumaraமக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (28) முற்பகல் 10.30 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ள அதேவேளை காயமடைந்த அநுரகுமார திஸாநாயக்க இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி – ஹொரண வீதியில் மண் ஏற்றிச் சென்ற டிப்பருடன் இவரது வாகனம் மோதியதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் அநுரகுமார திஸாநாயக்கவின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: