Home / இன்றைய செய்திகள் / அடுத்தடுத்த பேரழிவுகளால் ஆடிப்போனது மலேசியன் ஏர்லைன்ஸ்: பெயரை மாற்ற யோசனை!!

அடுத்தடுத்த பேரழிவுகளால் ஆடிப்போனது மலேசியன் ஏர்லைன்ஸ்: பெயரை மாற்ற யோசனை!!

adfc7871-e379-4de4-ad9c-31a4c6b98d92_S_secvpfஆறுமாத இடைவெளிக்குள் இரண்டு பேரழிவு விபத்துகளை சந்தித்துள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் தான் இழந்துள்ள புகழை மீட்கும் விதமாக பெயர் மாற்றம் மற்றும் பயண வழிகளுக்கான சீரமைப்பு முயற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்குப் புறப்பட்ட இந்நிறுவனத்தின் எம்எச்370 என்ற விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் ராடாரின் திரையிலிருந்து முற்றிலுமாக மறைந்தது. அது பசிபிக் கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், இந்த விமானம் குறித்த எந்தத் தகவல்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இந்த மாத ஆரம்பத்தில் 298 பயணிகளுடன் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த எம்எச்17 என்ற 777 போயிங் விமானம் உக்ரைனின் போர் நடந்துகொண்டிருந்த பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணித்த அனைவரும் இறந்துபோயினர்.

மொத்தம் 537 பேரை பலி வாங்கிய இந்த விபத்துகளைத் தொடர்ந்து நிலைகுலைந்துள்ள தங்களின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக நிறுவனம் தனது பெயரை மாற்றலாம் எனத் தெரிகிறது. அத்துடன் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கவும் மலேசிய ஏர்லைன்ஸ் திட்டமிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசிய அரசே இந்நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான வழித்தடங்களை சீரமைத்து லாபத்தை அதிகரிப்பதற்கான அவுட்சோர்சிங் முறைகளை விரிவடையச் செய்யும் தகவல் அறிக்கை தயாரிக்கும் பணி மலேசிய அரசின் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இதற்குத் தேவையான அதிகப்படி முதலீடு போட்டி விமானக் குழுக்களிடமிருந்து பெறப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோகமான இழப்புகளை சந்தித்துள்ளபோதும் தங்களின் நிறுவனம் வலுவானதாக மீண்டும் வெளிப்படும் என்று குறிப்பிட்டுள்ள மலேசிய ஏர்லைன்ஸ் வர்த்தக இயக்குனர் ஹக் டன்லெவி, இது ஒரு புதிய சகாப்தமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: