Home / இன்றைய செய்திகள் / அஞ்சான் இசை விழாவுக்கு வர வியாபாரம் பேசிய சமந்தா?

அஞ்சான் இசை விழாவுக்கு வர வியாபாரம் பேசிய சமந்தா?

unnamed (1)தமிழ் சினிமாவில் மட்டும் இசை விழாவோ அல்லது படத்துக்கு சம்பந்தப்பட்ட விழாவோ எதுவாக இருந்தாலும் அந்தந்த படத்தில் நடித்த நாயகிகள் மட்டும் வருவதே இல்லை.

த்ரிஷா,நயன்தாரா ஆகியோரை தொடர்ந்து தற்போது சமந்தாவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். சமீபத்தில் நடந்த அஞ்சான் இசை வெளியீட்டு விழாவிற்கு சமந்தா வரவே இல்லை.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமந்தா மேற்கொண்டு பணம் வேண்டும் என்று கேட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், அஞ்சான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத சமந்தா,அன்று மாலை தனியார் ஓட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதாக கூறியிருந்தாராம்.ஆனால் அங்கும் கடைசிவரை வரவே இல்லையாம் சமந்தா.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: