Home / இன்றைய செய்திகள் / அஜீத் பட வில்லனுடன் மோதும் கௌதம் கார்த்திக்!!

அஜீத் பட வில்லனுடன் மோதும் கௌதம் கார்த்திக்!!

c70d4abc-62ad-4ca2-82ab-11c2d6d91365_S_secvpf‘என்னமோ ஏதோ’ படத்தைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக், ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’, ‘இந்திரஜித்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘இந்திரஜித்’ படத்தின் 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

ஆக்ஷன் படமாக உருவாகிவரும் இப்படத்தில் கௌதம் கார்த்திக் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறக்கூடிய அளவுக்கு சண்டைக் காட்சிகள் இருக்கும் என்று கூறுகின்றனர். இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணுவின் மகன் கலாபிரபு இயக்குகிறார். கௌதம் கார்த்திக் ஜோடியாக சொனாரிக்கா படோரியா என்பவர் நடிக்கிறார். சங்கர்-எசன் லாய் இசையமைக்கின்றனர்.

இப்படத்தில் வில்லனாக சுதன்சு பாண்டே நடிக்கிறார். இவர் அஜீத் நடிப்பில் வெளிவந்த ‘பில்லா-2’ படத்தில் வில்லனாக நடித்தவர். படத்தில் முக்கியமான ஆக்ஷன் மற்றும் சேஸிங் காட்சிகளை சென்னை, கோவா, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் படமாக்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: