Home / இன்றைய செய்திகள் / அஜீத்துடன் தேவி அஜீத்!!

அஜீத்துடன் தேவி அஜீத்!!

Untitled-129அஜித்-கௌதம் மேனன் இணைந்திருக்கும் படம் குறித்து நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு விண்ணை முட்டுமளவு எகிறி கொண்ட போகிறது.

அந்த வகையில் இரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அஜித் நடிக்கும் 55-வது படத்தை பற்றிய ருசிகர தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ‘தேவி அஜித்’ ஒருவரும் நடிக்கிறாராம். மலையாள நடிகையான இவருக்கு படத்தில் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் படத்தில் அஜித் இரட்டை வேடம் ஏற்றிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒன்று அவரது சமீபத்திய வழக்கமான ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றம், மற்றொன்று மிகவும் இளமையான டீன் ஏஜ் கதாபத்திரமாம். அஜித் ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் முற்றிலும் வித்தியாசமான படமாக இப்படம் உருவாக்கப்பட்டு
வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேவி அஜித் சில மலையாள படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிட்த்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: