Home / இன்றைய செய்திகள் / அச்சுவேலியில் சுரேஷ் தலமையில் காணி அளக்க இடையூறு என முறைப்பாடு!!

அச்சுவேலியில் சுரேஷ் தலமையில் காணி அளக்க இடையூறு என முறைப்பாடு!!

822069132IMG3யாழ். அச்சுவேலியில் காணி அளவீடு பணிக்காக சென்ற போது காணி உரிமையாளர்களால் தாம் தடுக்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அச்சுவேலி பிரதேசத்தில் 9 காணி உரிமையாளர்களுக்கு சொந்தமான காணியை இராணுவ முகாம் அமைக்கும் நோக்குடன் சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் அளவீடு செய்யும் பணி பொலிஸ் பாதுகாப்புடன் நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்களால் முன்னெடுக்கப்பட இருந்தது.

அதற்கு காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அவ் எதிர்ப்பினையும் மீறி உத்தியோகஸ்தர்களால் அளவீட்டு பணி முன்னெடுக்க முயன்ற போது காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் வாகனத்தை சுற்றி நின்று போராட்டம் நடத்தியதுடன் அவர்கள் வாகனத்தில் இருந்து நில அளவை உபகரணங்களை கீழே இறக்கவும் அனுமதிக்கவில்லை.

சுமார் 3 மணித்தியாலங்களாக காணி உரிமையாளர்கள் நில அளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் தமது பணியை மேற்கொள்ள விடாது போராட்டம் நடத்தினர்.

அதனை அடுத்து இன்றைய தினம் தமது பணிகளை மேற்கொள்ளாது திரும்பினர்.

அதனை அடுத்து நில அளவையாளர் சிதம்பரப்பிள்ளை இராமநாத சுவேந்திர கலாநிதியால் காணி உரிமையாளர்கள் தாம் காணி அளவீட்டுக்காக சென்றபோது இடையூறு விளைவித்ததுடன் தமது பணியை முன்னெடுக்க விடாது தடுத்ததாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனே முன்னின்று செயற்பட்டதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: